Saturday 7 June 2014

என் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

10 -02-2014 அன்று எனது கல்லூரித் தோழியின் திருமணத்திற்கு சென்று வந்து மீண்டும் கரூர் திரும்புவதற்காக ஈரோடு காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பரும் கரூர் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தோம்.அப்பொழுதுதான் அந்த நிகழ்வு நடந்தது..

நேரம் மதியம் 2 மணி. ஈரோடு கதிரவனின் தாக்குதலில் துவண்டு கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்க பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்த நிழற்குடை மற்றும் மர நிழலில் பதுங்கிக்கொண்டிருந்தனர். தொடர்வண்டி நிலையத்திலிருந்து வந்த நானும் எனது நண்பரும் அந்த வெயிலிலும் தேநீர் குடிக்கலாம் என்று நிழற்குடை அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைக்குச் சென்றோம். இருவரும் குளம்பி ( குழம்பிடாதீங்க காபியைத் தான் சொன்னேன்) குடிக்க முடிவெடுத்து, குடித்தும் விட்டோம். பிறகு அதற்க்கான தொகையை கொடுத்தப் பின்னர் ஊர் கதை பேச ஆரம்பித்தோம்.

அன்றைய மறுநாள் எனக்கு பண்பலையில் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இருந்ததால் அதற்க்கு தயாராவதற்கு முன்னோட்டமாக அன்றைய தினம் நிகழ்ச்சித் தலைவர் பங்குபெற்ற நிகச்சியை கேட்டுக்கொண்டே பேச முற்பட்டோம் இருவரும்.

அயிந்து நாளிகை கடந்தது.. 
  என் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

Thursday 5 June 2014

பொருத்தமில்லா பொருத்தம்-காதலும் கவியும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

பொருத்தமில்லா பொருத்தம்-காதலும் கவியும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

உன் கண்களை
வில்லேனவும்
அம்பெனவும்
ஒப்புமைபடுத்தியது
தவறு என்று
இப்போதுதான்
உணர்ந்தேன்...

என் இருதயத்தை
நீ
கையில் ஏந்திச் சென்றப் போது

FOR READING....

பொருத்தமில்லா பொருத்தம்-காதலும் கவியும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

உன்னுடன் அந்த நாட்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

உன்னுடன் அந்த நாட்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

நீ நீங்கிய பொழுதும்
நீங்காத உன் நினைவுகள்;
உடலழிந்தப்பின்னும்
உருகாத உன் முகம்;
பக்கத்தில் பக்குவமாய்
படுத்துக்கொண்டது;

உன்னுடன்
அந்த நாட்கள்...

FOR READING....

உன்னுடன் அந்த நாட்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

தமிழ் நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கங்கள் .......!

இப்பதிவானது உறுப்பினர்களின் கவிதைகளைக் கொண்டு பூச்சரம் போல கவிதைச்சரமாக தொடுக்கப்போகிறது.உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கவிதைகளை மட்டும் பதியவும்.

குறிப்பாக பின்னூட்டம் ஏதும் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேம்.

கவிதைகளின் வரி அமைப்பானது மிகக் குறைவாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறோம்.

இடுப்பில் இருந்த
மஞ்சள் நிறத் துண்டால்
காலுக்கடியில் இருந்து
ஒரு கைப்பிடி மண்ணெடுத்து
முடிந்து வைத்துக்கொண்டான்
ஒரு விவசாயி.

சிமிட்டி சுவர்களுக்குள்
புதையுண்ட
தனது...
பூமித்தாயின் நினைவாய்

---------------------------------------------------

பூமித்தாயின் நினைவாய்
புழுதி காடெல்லாம்
உழுது போட்டு வைத்து
அழுது தொழுது நிற்கிறோம்
பழுதாகி போன மழையை எண்ணி ...
உழுத வயல் எல்லாம்
அழுத கண்ணீர் பாய ....

---------------------------------------------------

அழுத கண்ணீர்
ஆறாகப் பாய
ஆறாத உள்ளம்
அவளையே எண்ண
அன்றிலிருந்து இன்றுவரை
உடல் சுவரில்
முட்டி முட்டி
அழுதுகொண்டே இருக்கிறது
ரத்தில் குளித்த்தப்பின்னும்
இருதயம்

பூவிரல் துடைக்க வரும்
என எண்ணியே

--------------------------------------------------

பூவிரல் துடைக்க வரும்என எண்ணியே
பூத்திருந்த காலங்கள் எல்லாம்
புண்ணாகி போனதே
புன்னகைகள் எல்லாம் புதைத்தாய்
புழுவாக துடிக்கின்றேன்
பூவாக சிரிக்கிறாய் நீயோ ..

பொழுதெல்லாம் போக்கினேன்
பொன்னான காலங்கள் போக்கினேன்
பொழப்பெல்லாம் போக்கினேன்
பெண்ணான உன்னை நோக்கிய
பொன்னான காலம் முதலாக .... 

----------------------------------------------------

FOR CONTINUE......   

கவிச்சரம் : கவிதைகளின் தொகுப்பு (தொடர் பதிவு) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
 
கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

ஒத்தையடி பாதையிலே
ஓரச்சாரம் பார்த்து
நடக்கையிலே
கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க
காதல் மொழியால் அவன்
கலவரமும் செய்கின்றான்
அங்கே ...
 
கன்னிக்கருவிழிகள்
களினடனமும் புரிகின்றன
பண்பாடு முன்னிழுக்க
கருப்பன் பாசம் பின்னிழுக்க
இருதலைக் கொள்ளியாய்
கிடந்து நான் தவிக்கிறேன்
கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum 

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

காலரா என்ற சொல் மரண தேவனின் சாசனத்திற்கு இணையானதாக ஒரு 60 ஆண்டுகள் முன்பு வரை கருதப் பட்டது. கங்கை நதிப் பகுதிகளில் தேங்கிய நீர்க்குட்டைகளின் காரணமாக இந்தத் தொற்று நோய் முதன்முதலில் உருவானதாகக் கருதப் படுகிறது. பின்னர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் காரணமாக, ரஷ்யா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா கண்டங்கள், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் பயணித்து கோடிக்கணக்கில் உயிர்களைக் காவு கொண்டது. 18,19,20ம் நூற்றாண்டுகளின் உலக வரலாறு பற்பல நாடுகளில் காலாரா சாவுகளின் நீண்ட பட்டியல்களால் நிரம்பியது. 1900 முதல் 1920 வரையிலான இருபது வருடங்களில் இந்தியாவில் மட்டும் 80 லட்சம் மக்கள் காலராவால் இறந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது. சுகாதார சீர்கேடுகள் மட்டுமின்றி, பிரிட்டிஷ் காலனிய அரசின் பொருளாதார சுரண்டல், பஞ்சங்கள், இந்திய பொதுஜனங்கள் குறித்த மெத்தனப் போக்கு ஆகியவையும் மரணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தன.

சமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில் சிறப்பான பொது சுகாதார கட்டமைப்புகளால் காலரா முற்றிலுமாக தடுக்கப் பட்டு விட்டது. இந்தக் கட்டமைப்புகள் சீராக இல்லாத வளரும் நாடுகளில் அவ்வப்போது தொற்று நோயாகப் பரவுகிறது. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில், ஒவ்வொரு மழைக் காலத்திலும் காலரா பரவி மக்களைப் பீடிக்கிறது. ஆனால், முன்பு போல, அது ஆட்கொல்லியாக இல்லாமல், சிகிச்சை மூலம் மீளக் கூடிய நோயாக ஆகி விட்டது. நவீன மருத்துவம் இந்த நோயின் காரணிகளை முழுமையாகக் கண்டறிந்து அவற்றுடன் போராடி வெல்லக் கூடிய அளவுக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் பரவல் தடுப்பு முறைகளையும் உருவாக்கியதே இதற்குக் காரணம்.
  FOR CONTINUE READING... 

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

வாய்க்க வரப்போரம்
வண்டி உருளும்
ஒத்தையடி பாதையோரம்
அள்ளி முடிஞ்ச கொண்டையிலே
அரை மனச கொண்டு போறவளே...

அன்னனடையழகி
அமுதவாய் மொழியழகி
ஆச மச்சான் கேக்குறேன்
அலுங்காம குலுங்காம
சொல்லிபுடு...

அத்தன அழகையும்
எங்க பதுக்கி வச்சிருக்க...

முந்தான சொருகையிலே
கையை முத்தமிடும்
இடுப்போரமா..?

மூச்சு முட்டி
முன்னழக கூட்டி
என்ன முறைச்சு பாக்குற
முசகுட்டி காது மடிப்போரமா..?

கர கட்டுன கண்டாங்கி சேல
கெண்டைக்கால காட்டுதடி
இறுக்கி புடுச்ச மாராப்பு
ஏ இறுமாப்ப கூட்டுதடி
நீ பொட்டு வச்ச இடத்துல
முத்தமிட தோணுதடி
உன்ன மாரோடு சாச்சுகிட்டு
மாந்தோப்பு பூந்தோப்புன்னு
சுத்திவர மனம் ஏங்குதடி  
  for continue reading...

அத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

தலை(க்)கணம் வந்தது எப்படி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum

தலை(க்)கணம் வந்தது எப்படி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum